உடல் எடை சட்டென்று குறைய சிறந்த உணவுகள் இதோ!

By Balakarthik Balasubramaniyan
03 Aug 2023

உடல் எடையை குறைப்பது எப்படி?

உடல் எடையை வேகமாகவும் எளிதாகவும் குறைப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

உணவை தவிர்க்கக் கூடாது

டயட் என்ற பேரில் உணவை எப்போதும் தவிர்க்கக் கூடாது. முறையான நேரத்தில் அளவான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தண்ணீர் அவசியம்

சாப்பிடும் முன் தண்ணீர் குடிப்பது நல்லது. சில சமயங்களில் தாகமும், பசியும் தவறாக புரிந்துக் கொள்ளக் கூடும். அளவான உணவை எடுக்க சாப்பிடும் முன் தண்ணீர் எடுக்கலாம்.

ஊட்டச்சத்து உணவுகள்

கடுமையான டயட் மற்றும் உடற்பயிர்சிகளை மேற்கொள்ள வேண்டாம். இதை படிப்படியாகவும் நிலையாகவும் தொடர்ச்சியாகவும் செய்ய வேண்டும்.

அதிக பழங்கள், காய்கறிகள்

நார்ச்சத்து, வைட்டமின், தாதுக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகளை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள். சாப்பாடு நேரத்தில் கூட இதை எடுக்கலாம்.

தினமும் உடற்பயிற்சி

தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியம். உடனடியாக ஆரம்பித்து விட்டுவிடாமல் தொடர்ச்சியாகவும் சரியாகவும் தினசரி செய்ய வேண்டும்.

உணவு முக்கியம்

நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவை உறுதி செய்யுங்கள். ஒரே இடத்தில் அமராமல் சற்று நடந்துக் கொடுங்கள். புத்துணர்ச்சியோடு செயல்படுங்கள்.