Doctor Verified

Hair Fall In Men: ஆண்களின் தலைமுடி உதிர்வதற்கான அறிகுறிகள் மற்றும் தீர்வுகள்

  • SHARE
  • FOLLOW
Hair Fall In Men: ஆண்களின் தலைமுடி உதிர்வதற்கான அறிகுறிகள் மற்றும் தீர்வுகள்

பொதுவாக பெண்களை விட ஆண்களுக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்கும். இது தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இருக்கலாம். இதற்கு பரம்பரை பண்புகள், ஹார்மோன் மாற்றங்கள், நோய்கள் அல்லது வயது முதிர்வு போன்றவை காரணங்களாக இருக்கலாம். 

சிலர் இதனை கண்டுக்கொள்ளாமல் அப்படியே விட்டுவிடுகிறார்கள். மேலும் சிலர் இதனை மறைக்க சிகை அலங்காரங்கள், ஒப்பனை, தொப்பிகள் போன்றவற்றை தேடுகிறார்கள். இன்னும் சிலர் முடி உதிர்வதைத் தடுக்க அல்லது வளர்ச்சியை மீட்டெடுக்க கிடைக்கக்கூடிய சிகிச்சைகளில் ஒன்றைத் தேர்வு செய்கிறார்கள். முடி உதிர்தல் பல்வேறு வழிகளில் தோன்றும். அதற்கென சில காரணங்கள் உள்ளன. இது குறித்து தோல் மருத்துவர் சுனில் குமார் பிரபு எங்களிடம் பகிர்ந்துள்ளார். 

இதையும் படிங்க: ஆரோக்கியமான முடி வேண்டுமா? இந்த 7 ரகசியத்தை தெரிந்துக்கொள்ளுங்களேன்!

முடி உதிர்வதற்கான அறிகுறிகள் 

வயதாகும் போது பொதுவாக முடி உதர்வு ஏற்படும். ஆண்களுக்கு நெற்றியில் இருந்து முடி பின்வாங்க தொடங்கும். இது கலப்போக்கில் வழுக்கையாக மாறிவிடும். பொதுவாக முடி உதிர்வுக்கு முன் அரிப்பு அல்லது தலை வலி ஏற்படலாம். உணர்ச்சிகள் முடி உதிர்வை ஏற்படுத்தலாம். இதனால் முடியை வாரும்போதோ அல்லது அலசும் போது கைநிறைய முடி வெளியேறலாம். இந்த வகை முடி உதிர்தல் பொதுவாக ஒட்டுமொத்த முடி உதிர்தலை ஏற்படுத்துகிறது. அனால் இது தற்காலிகமானது. 

புற்றுநோய்க்கான கீமோதெரபி போன்ற சில நிபந்தனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளில் உள்ளவர்களுக்கு, உடல் முழுவதும் முடி உதிர்வை ஏற்படுத்தும். இவர்களுக்கு முடி மீண்டும் வளர வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர் கூறினார். 

மேலும் உச்சந்தலையில் பரவும் திட்டுகள், ரிங்வோர்மின் அறிகுறியாக இருக்கலாம், அதாவது பூஞ்சை பரவலின் அறிகுறியாக இருக்கலாம் என்றும், இது உடைந்த முடி, சிவத்தல், வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். 

முடி உதிர்வதற்கான ஆபத்து காரணிகள்

முடி முதிவு பல காரணங்களால் ஏற்படாலாம். அவை பின்வருமாறு, 

* உங்கள் தாய் அல்லது தந்தையின் பக்கத்தில் வழுக்கை ஏற்பட்ட குடும்ப வரலாறு

* வயது முதிர்வு

* குறிப்பிடத்தக்க எடை இழப்பு

* நீரிழிவு மற்றும் லூபஸ் போன்ற சில மருத்துவ நிலைமைகள்

* மன அழுத்தம்

* மோசமான ஊட்டச்சத்து

முடி உதிர்வை எப்படி தடுப்பது? 

உங்கள் முடியை மென்மையாக பராமரிக்கவும். உங்கள் முடி ஈரமாக இருக்கும் போது, முடியை வாருவதை தவிர்க்கவும். சூடான கருவிகளை கொண்டு சிகை அலங்காரம் செய்வதை தவிர்க்கவும். இருக்கமான ரப்பர் பேண்டுகளை போடுவதை தவிர்க்கவும். முடி உதிர்வை ஏற்படுத்தக்கூடிய மருந்துகள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ் பற்றி உங்கள் மருத்துவரிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளவும். புற ஊதா ஒளியின் பிற மூலங்களிலிருந்து உங்கள் தலைமுடியைப் பாதுகாக்கவும். ஒரு வகையில் புகைப்பிடிப்பது கூட ஆண்களின் வழுக்கைக்கு காரணமாக திகழும் என மருத்துவர் கூறினர். 

இதையும் படிங்க: பொடுகை விரட்ட வீட்டிலிருக்கும் எலுமிச்சை பழத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

மருத்துவரை எப்போது அணுக வேண்டும்? 

உங்களுக்கோ அல்லது உங்கள் பிள்ளைக்கோ தொடர்ந்து முடி உதிர்வதால் நீங்கள் கவலையடைந்து சிகிச்சையைத் தொடர விரும்பினால், முதலில் தோல் மருத்துவரை அணுகவும். முன்புற ஃபைப்ரோசிங் அலோபீசியா அனுபவிப்பவர்கள், நிரந்தர வழுக்கையைத் தவிர்ப்பதற்கு ஆரம்பகால சிகிச்சையைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.

உங்களுக்கோ அல்லது உங்கள் பிள்ளைக்கோ முடி வாரும்போது, அலசும் போதும் கையோடு முடி வருவதை கண்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும். ஏனெனில், திடீர் முடி உதிர்தல் சிகிச்சை தேவைப்படும் அடிப்படை மருத்துவ நிலையைக் குறிக்கலாம் என்று மருத்துவர் குமார் கூறினார். 

Image Source: Freepik

அடுத்ததை படிக்கவும்

Curd Benefits: தயிரை சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு எப்படி பயன்படுத்துவது?

பொறுப்புத் துறப்பு