முகப்பருக்களை விரைவாக அகற்றுவது எப்படி?

By Balakarthik Balasubramaniyan
03 Aug 2023

முகப் பருக்கள் ஏற்பட காரணம்

வெயில், உடல் சூடு, க்ரீம், சோப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முகப்பருக்கள் ஏற்படுகிறது.

ஐஸ் கட்டிகள்

ஐஸ் கட்டிகள் அல்லது ஐய் வாட்டரை வைத்து முகத்தில் 10 நொடிகள் 2 அல்லது 3 முறை வைக்கவும். இப்படி செய்தால் பிரச்சனை பெருமளவு குறையும்.

பேஸ்ட் செய்து தடவலாம்

ஒரு கரண்டி கடலை மாவு எடுத்து சிறிது மஞ்சள் சாறு எடுத்து ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்டாக கலக்கவும். இதை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவலாம்.

பூண்டு பயன்படுத்தலாம்

முகப்பரு இருக்கும் பட்சத்தில் இரவில் தூங்கும் முன் அந்த இடத்தில் பூண்டை தூவலாம். இது முகப்பரு பிரச்சனையை குறைக்கும்.

ஆப்பிள் துண்டை பயன்படுத்தலாம்

ஆப்பிள் துண்டை எடுத்து முகத்தில் தேய்க்கவும். இப்படி செய்தால் எண்ணெய் பசை குறையும். இதன்மூலம் முகம் புத்துணர்ச்சி பெறும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் இரண்டு சொட்டை எடுத்து பருக்களை சுற்றி தேய்க்கவும். இப்படி செய்தால் முகப்பரு பிரச்சனை நீங்கும்.

முகப்பருக்கள் நீங்கும்

இதுபோன்ற பல வழிகளில் முகப்பருக்களை நீக்கலாம் என்றாலும் தீவரத்தை உணர்ந்து மருத்துவரை அணுகுவது நல்லது.