பிள்ளைகளின் வறட்டு இருமலை போக்கும் 5 வீட்டு வைத்தியங்கள்!!!

  • SHARE
  • FOLLOW
பிள்ளைகளின் வறட்டு இருமலை போக்கும் 5 வீட்டு வைத்தியங்கள்!!!

குழந்தைகளின் வறட்டு இருமலுக்கான தீர்வை இப்பதிவில் படித்தறிவோம் வாருங்கள்.

குழந்தைகளின் வறட்டு இருமலை குணப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள்: நோய்த்தொற்று, அலர்ஜி, மாசுபடுத்திகள் மற்றும் பருவநிலை மாற்றங்களால் குழந்தைகளுக்கு இருமல் பிரச்சனை ஏற்படுகிறது. வறட்டு இருமலால், குழந்தைகள் அதிக சிரமபடுகிறார்கள். இந்நிலையில் அவர்களுக்கு உணவின் மீதுள்ள ஆர்வம் குறைந்து சரியாக சாப்பிடமாட்டார்கள். சரியான உட்கொள்ளலின்றி உடலும் பலவீனமடைகிறது. குழந்தைகளின் வறட்டு இருமலை குணப்படுத்த, மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்துகளைக் கொடுக்கலாம். ஆரம்பத்திலேயே சில எளிய வீட்டு வைத்தியங்களை பின்பற்றி, இதை சரி செய்வதன் மூலம் இருமல் தீவிரமாவதை தடுக்கலாம். குழந்தையின் வறட்டு இருமல் மற்றும் தொண்டை கட்டுப் பிரச்சனையை, குணப்படுத்த இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யுங்கள்.

தேங்காய் எண்ணெய் மசாஜ்

ஒரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ளவும். இதில் 1 டீஸ்பூன் ஓமம் மற்றும் 3 முதல் 4 பல் பூண்டை தட்டி சேர்த்துக்கொள்ளுங்கள். மிதான தீயில் எண்ணெயை சூடாகவும். சூடு தனிந்த பின் வடிகட்டிக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயைக் கொண்டு குழந்தைக்கு மசாஜ் செய்யவும். இதை குழந்தையின் கழுத்து மற்றும் உள்ளங்கால்களிலும் தடவலாம்.

மஞ்சள் பால்

மஞ்சள் பால் உடலுக்கு மிகவும் நல்லது. மஞ்சளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் வறட்டு இருமலை குணப்படுத்துவதோடு, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, இதில் ஒரு சிட்டிகை மிளகு பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொடுக்கலாம்.

தேன்

குழந்தைகளுக்கு வறட்டு இருமல் இருந்தால், தேன் கொடுங்கள். தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்புப் பண்புகள் குழந்தைகளின் இருமல் மற்றும் தொண்டை புண் பிரச்சனையைக் குணப்படுத்த உதவுகிறது. மேலும், குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. முக்கியமாக, ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டும் தேன் கொடுக்க வேண்டும்.

வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிக்க செய்யலாம்

கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கு இதை முயற்சி செய்யலாம். வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிக்க வையுங்கள். இவ்வாறு செய்வதால் இருமல் மற்றும் தொண்டை கட்டுப் பிரச்சனை குணமாகும். விருப்ப பட்டால் வெந்நீருடன் ஒரு சிட்டிகை கல்லுப்பு சேர்த்துக்கொள்ளலாம்.

மாதுளை ஜூஸ்

மாதுளை ஜூஸ் வறட்டு இருமலை குணப்படுத்த உதவுகிறது. மாதுளை ஜூஸ் உடன் ஒரு சிட்டிகை சுக்கு அல்லது கருப்பு மிளகு தூள் சேர்த்துக் கொடுங்கள். இது வறட்டு இருமல் மற்றும் தொண்டை கட்டு பிரச்சனையைக் குணப்படுத்துகிறது.

இந்த வீட்டு வைத்தியங்கள் அனைத்தும் குழந்தைகளின் வறட்டு இருமலை குணப்படுத்த பயனுள்ளதாக இருக்கும். குழந்தைக்கு வறட்டு இருமல் பிரச்சனை இருந்தால், மருத்துவரை அணுகி, ஆலோசித்த பின்னரே மருந்துகளைக் கொடுக்க வேண்டும். 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சிக்க வேண்டும்.

All Images Credit: freepik

அடுத்ததை படிக்கவும்

Curd Benefits: தயிரை சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு எப்படி பயன்படுத்துவது?

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்