Ginseng Benefits: ஜின்செங் மூலிகை கேள்விப்பட்டதுண்டா? இதனில் இருக்கும் ஏராளமான நன்மைகள் பற்றி அறிவீரா?

  • SHARE
  • FOLLOW
Ginseng Benefits: ஜின்செங் மூலிகை கேள்விப்பட்டதுண்டா? இதனில் இருக்கும் ஏராளமான நன்மைகள் பற்றி அறிவீரா?

Ginseng Benefits: ஏராளமான மருத்துவநன்மைகள் ஜின்செங் வேரில் கொட்டிக் கிடக்கிறது. 11 வகையான ஜின்செங் உள்ளன. இதில் ஆசிய மற்றும் அமெரிக்க ஜின்செங் மிக முக்கியமானது. மருத்துவ குணங்கள் இதில் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக ஜின்செங் மூலிகை ஆண்களுக்கு ஒரு வரம் போன்றது. சீனாவின் மருத்துவபலன்களில் ஜின்செங் முக்கிய பங்கு வகிக்கிறது. பல நூறு ஆண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தில் ஜின்செங் பங்களிப்பு பிரதானம்.

ஜின்செங் நன்மைகள் என்ன?

மாறிவிட்ட வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் பலர் பாலியல் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு ஜின்செங் மூலிகை ஒரு அதிசய மருந்தாக செயல்படுகிறது. நீரிழிவு, காய்ச்சல் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களுக்கான சிகிச்சைக்கும் ஜின்செங் பயன்படுத்தப்படுகிறது.

இதையும் படிங்க: வாயு தொல்லை இனி இல்லை! மருத்துவரின் பரிந்துரை இங்கே…

ஜின்செங் எப்படி கிடைக்கும்?

ஜின்செங் மூலிகையானது கொரிய தீபகற்பம், வடகிழக்கு சீனா, கனடா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் மட்டுமே கிடைக்கும். இது பொடிகள், காப்ஸ்யூல்கள் மற்றும் டி-பேக்குகள் வடிவில் உலகம் முழுவதும் கிடைக்கிறது. ஆனால் அதை அப்படியே பயன்படுத்த முடியாது. மருத்துவர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. எத்தனை நாட்கள் எடுக்க வேண்டும், எப்படி உபயோகிப்பது என்பதை பரிந்துரை பெறுங்கள்.

பாலியல் நன்மைகள்

ஜின்செங் மூலிகை ஆண்களுக்கு விறைப்புத்தன்மை, விந்து தொடர்பான பிரச்சனைகள் மற்றும் மலட்டுத்தன்மையை குணப்படுத்துகிறது. ஜின்செங்கை உட்கொள்வது ஆண்களின் அந்தரங்கப் பகுதியில் இரத்த ஓட்டத்தை பெரிதும் அதிகரிக்கும். இது பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

டெஸ்டோஸ்டிரோன் ஒரு ஆண் ஹார்மோன். டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு ஆண்களின் பாலியல் ஆசையை குறைக்கும். சில சந்தர்ப்பங்களில், உடலுறவுக்கான அவர்களின் ஆசை மறைந்துவிடுகிறது. இந்த பிரச்சனையை ஜின்செங் சரிசெய்கிறது. இது டெஸ்டோஸ்டிரோன் வெளியீட்டை மேம்படுத்துகிறது, விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

பாலியல் பிரச்சனைகள் தவிர, பல தீவிர நோய்கள் மற்றும் அழகு பிரச்சனைகளை தடுக்க ஜின்செங் பேருதவியாக இருக்கிறது. சுகாதார நிபுணர் அல்லது மருத்துவரை கலந்தாலோசித்த பிறகு, பல்வேறு பிரச்சனைகளில் இருந்து விடுபட இதைப் பயன்படுத்தலாம்.

நீரிழிவு நோய்க்கு தீர்வு

டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு ஜின்செங் பெரிய அளவு உதவும். ஜின்செங் ஆனது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. அதேபோல் இந்த மூலிகை இரத்த சர்க்கரை அளவுத் திறனை குறைக்க உதவும். சர்க்கரை நோயாளிகள் அவர்களது நலனை கையாள இது பேருதவியாக இருக்கும்.

ஆற்றல் மேம்படும், மூளை சக்தி அதிகரிக்கும்

சோர்வை நீக்கி ஆற்றலை அதிகரிக்க ஜின்செங் பெருமளவு செயல்படுகிறது. சோர்வாக உணரும் நபர்கள் ஜின்செங் மூலிகையை எடுத்துக் கொள்ளும் போது தங்களது ஆற்றலை மீட்டெடுப்பதில் நல்ல முன்னேற்றத்தை காணுகிறார்கள். ஆற்றல் மீட்டெடுக்கும் மாத்திரைகள் மற்றும் பானங்களிலும் இது சேர்க்கப்படுகிறது. அதேபோல் மூளையின் செயல்திறனை அதிகரிக்கவும் இது உதவுகிறது. அல்சைமர் நோயின் தீவிரத்தையும் இது குறைக்கும்.

புற்றுநோய் எதிர்ப்பு பலன்

ஜின்செங் புற்றுநோயை கட்டுப்படுத்தவும் பெரிதளவு உதவுகிறது. புற்றுநோய்க் கட்டி வளர்ச்சியை குறைக்க இது உதவும். ஜின்செங் நுரையீரல் புற்றுநோயை தடுக்க உதவுவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சிறுநீரகம், கருப்பைகள், வயிறு, தோல் மற்றும் கருப்பை வாய் ஆகியவற்றின் புற்றுநோய்களையும் தடுக்கவும் உதவுகிறது.

உடல் எடையை குறைக்க உதவும்

எடை இழப்புக்கு அதிக அளவில் இது உதவும். ஜின்செங் வேர்களை நீரில் வேக வைத்து குடித்தால் உடல் எடை குறைவதை உடனடியாக உணரலாம். உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகளை மேற்கொள்பவர்கள் கூடுதலாக இதை எடுத்துக் கொண்டால் நல்ல பலனைப் பெறலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

உடலின் டி செல்கள், பி செல்கள் மற்றும் டெண்ட்ரிக் செல்கள் செயல்திறனை சீராக்க இது உதவுகிறது. உடலில் உள்ள ஒவ்வாமை மற்றும் நச்சுப் பொருள்களை தடுக்கிறது. நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு தூண்டுதலாகவும் ஜின்செங் பயன்படுத்தப்படுகிறது.

இதையும் படிங்க: குளிர்காலத்தில் செரிமானத்தை மேம்படுத்த வேண்டுமா.? உங்களுக்கான குறிப்புகள் இங்கே

ஆயுர்வேதத்தில் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு மூலிகை மருந்துகள் உள்ளது என்றாலும் முறையான மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது என்பது மிக அவசியம்.

image source: freepik

அடுத்ததை படிக்கவும்

Curd Benefits: தயிரை சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு எப்படி பயன்படுத்துவது?

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்