அடம்பிடிக்கும் தொப்பையை கரைக்கும் டார்க் சாக்லேட்!!

By Balakarthik Balasubramaniyan
03 Aug 2023

சுகர் கலந்த சாக்லேட்டை விட டார்க் சாக்லேட் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதை, வழக்கமாக உட்கொள்வது, வயிற்றில் உள்ள கொழுப்பை குறைத்து உங்கள் தொப்பையை குறைக்க உதவும். இதன் ஆரோக்கிய நண்மைகள் பற்றி பார்க்கலாம்.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டில் சுமார் 530-650 கலோரிகள் உள்ளது. இதில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி கலோரிகளை எரிக்க உதவுவதாக ஆராய்ச்சி கூறுகிறது.

வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்

டார்க் சாக்லேட் அதன் மோனோ-சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உடலில் நிகழும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.

இன்சுலின் சுரப்பு

டார்க் சாக்லேட் ஆரோக்கியமான கொழுப்புகளால் நிரம்பியுள்ளது. மேலும், மெக்னீசியம் (ம) ஃபிளாவனாய்டுகள் உள்ளன. அவை டைப்-2 நீரிழிவு நோய்க்கு எதிராக செயல்படக்கூடும். இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்க உதவும் ஃபிளாவனாய்டுகளையும் கொண்டுள்ளது.

இரத்த அழுத்தம்

டார்க் சாக்லேட்டில் ஆக்ஸிஜனேற்ற திறன் அதிகம் உள்ளது. மேலும், இதில் எபிகாடெசின் கலவை உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் மற்றும் எண்டோடெலியல் செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவும்.

பசியை கட்டுப்படுத்தும்

உணவு உண்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் டார்க் சாக்லேட்டை உட்கொண்டால், அது உங்கள் பசியை பாதியாக கட்டுப்படுத்தி அளவாக சாப்பிட வைப்பதுடன் உங்களுக்கு திருப்தியான உணர்வை தரும்.

தசைப்பிடிப்பை குறைக்கும்

டார்க் சாக்லேட்டில் அதிக மெக்னீசியம் இருப்பதால் வொர்க்அவுட்டிற்குப் பிறகு ஏற்படும் தசைப்பிடிப்பைக் குறைக்க உதவும். இதில் உள்ள நல்ல கொழுப்பு உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைக்கும்.

மன அழுத்தம்

டார்க் சாக்லேட்டில் காணப்படும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களைக் குறைக்கும். இது ஆக்ஸிஜனேற்ற சேதத்தையும் தடுக்கிறது. எனவே, மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள்.

இதய ஆரோக்கியம்

டார்க் சாக்லேட் இதய நோய்க்கான ஆபத்தை குறைக்கிறது. இதில், தாமிரம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உள்ளது. இது பக்கவாதத்திற்கு எதிராகவும், பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியை கட்டுப்படுத்தும்.

புற்றுநோய் அபாயம்

டார்க் சாக்லேட்டில் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக செயல்படக்கூடிய ஃபிளாவனாய்டுகள் மற்றும் கோகோவில் இருந்து பெறப்பட்ட பென்டாமெரிக் புரோசியானிடின் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இது புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும்.