குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை எப்போது, எப்படி நிறுத்துவது?

By Balakarthik Balasubramaniyan
03 Aug 2023

தாய், குழந்தை இருவருக்கும் நல்லது

தாய்ப்பால் கொடுப்பது என்பது தாய், குழந்தை இருவருக்கும் நன்மை பயக்கும் விஷயமாகும்.

எப்போது பால் கொடுப்பதை நிறுத்துவது?

தாய்மார்களுக்கு ஏற்படும் பொதுவான சந்தேகம். எப்போது, எப்படி பால் கொடுப்பதை நிறுத்துவது என்பதாகும்.

வைட்டமின்கள்

குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் கொழுப்புகள் தாய்ப்பால் மூலம் கிடைக்கும்.

ஆறு மாதம்

பிறந்ததிலிருந்து 6 மாதங்களுக்கு தாய்ப்பால் கட்டாயம் கொடுக்க வேண்டும்.

ஒரு வருடம்

ஒரு வருடத்திற்கு பால் கொடுப்பதை தொடர்ந்தால் நல்லது என அமெரிக்க மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒன்றரை வருடம்

குழந்தைகளுக்கு ஒன்றரை ஆண்டுகள் தாய்ப்பால் கொடுத்தால் அந்தக் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் ஆஸ்துமா, அலர்ஜி வராது.

மெதுவாக நிறுத்தலாம்

மெதுவாக தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது நல்லது. படிப்படியாக நிறுத்த வேண்டும்.

படிப்படியாக நிறுத்த வேண்டும்

பிற உணவுகளை கொடுக்கப் பழகி மணிநேரம், நாள், வாரம் என காலக் கணக்கில் ஒவ்வொரு முறை கொடுத்து நிறுத்தலாம்.